follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுஇலங்கை - தென் ஆபிரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று

இலங்கை – தென் ஆபிரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று

Published on

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்தப்போட்டி, இரவு – பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இதேவேளை, முதல் போட்டியில் உபாதைக்குள் தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு கேஷவ் மஹாராஜ் தலைவராக செயற்படவுள்ளார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...