சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம்

837

கொரோனா வைரஸ் தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் குறித்த விபரங்கள் சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விருந்தகங்கள், உணவகங்கள் போன்றவற்றிற்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதி பத்திரத்தை கொண்ட மதுபானசாலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானத்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here