விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவின் கருத்தின் பேரில் செயல்படுத்தப்பட்ட ‘பால் நிரம்பி வழியும் நாடு’ ஐந்தாண்டு கால்நடைத் திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (14) இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன,
“நாளாந்த பால் உற்பத்தியை 3 மில்லியன் லீற்றராக அதிகரிப்பதே எமது குறிக்கோளாகும். இலங்கையில் 337 கால்நடை வைத்திய பிரிவுகள் உள்ளன. அவற்றிலிருந்து தேவையான ஆதரவைப் பெறுகிறோம். 20 லீற்றருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 22,500 பண்ணைகளையும், 40 லீற்றருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 15,000 பண்ணைகளையும், 100 லீற்றருக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் 1,200 பண்ணைகளையும் உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
அத்துடன், இதன்போது உரையாற்றிய காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில்..
“விவசாய அமைச்சு என்ற வகையில், விவசாயத் துறையின் எதிர்கால வளர்ச்சியை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த அமைச்சு அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைத்து அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டது. பால் பண்ணையாளர்களை, பால் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
விவசாய பயிர் உற்பத்தியை அதிகரிக்க ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன மகிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பால் பண்ணையாளர்களை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், பால் உற்பத்தியுடன் தொடர்பான பொருட்களை அதிகரிப்பதற்கும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச இயந்திரங்களை ஈடுபடுத்துவதன் மூலம் ‘பால் நிரம்பி வழியும் நாடு’ என்ற திட்டத்தை ஒரே இலக்கின் கீழ் செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றும் தெரிவித்தார்.