சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை கொரோனா பரிசோதனை

481

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் கலந்துக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு சுகாதார பிரிவினரால் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here