பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.