அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள சீனியை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ சிவப்பு சீனி 117 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 120 ரூபாவுக்கும் மொத்த வர்த்தகர்களுக்கு வழங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திட்டமிட்டுள்ளார்.