follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசீரற்ற காலநிலையால் 12, 289 பேர் பாதிப்பு : பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு தடை

சீரற்ற காலநிலையால் 12, 289 பேர் பாதிப்பு : பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு தடை

Published on

சீரற்ற காலநிலையால், இதுவரையில் 9 மாவட்டங்களில், 3037 குடும்பங்களைச் சேர்ந்த 12, 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 485 குடும்பங்களைச் சேர்ந்த 2374 பேர், 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள பிரதேசங்களில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக தொடருந்து சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்று காலை 8.30, முற்பகல் 9.45 ஆகிய நேரங்களில் கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்க இருந்த தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், காலை 8.30, முற்பகல் 10.15 ஆகிய நேரங்களில் பதுளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்க இருந்த தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

rnஇதேவேளை,  சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...