ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி 1 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள குறித்த தடுப்பூசிகள், கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக செலுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்