இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி கவலையளிப்பதாக மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள மொஹம்மட் நஷீட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியதாக மாலைத்தீவுகளின் சபாநாயகர் மொஹமட் நஷீட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைத்தீவுகளின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் முன்வைத்த யோசனையை கடந்த மே மாதம் 19 ஆம் திகதி, அவ்வேளையில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது