இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்

659

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வழமை நிலைக்கு கொண்டு வர பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெட்ரோல், மருந்து, எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். அரசாங்கத்தின் வருவாய் 14 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி அதிக வருமானம் உள்ளவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்..

இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட 2 பில்லியன் செலவை இந்த ஆண்டு 1.3 பில்லியனாக குறைக்க முடிந்தது. அதற்கமையவே மருந்துகள், எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடிந்தது.

தற்போது நாட்டின் வருமானம் சுமார் 1.2 பில்லியன் டொலர்களாகும். தொடர்ந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அது நாட்டின் வருமானத்திற்கு முக்கியமானதாக அமையும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அசௌகரியங்களை குறைந்த பட்சம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையாவது தாங்க வேண்டியிருக்கும் என நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கு தொடர்பில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வழங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here