follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஒன்பது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

ஒன்பது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்

Published on

ஒன்பது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர திசாநாயக்க, கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சரத் வீரசேகர, அருந்திக்க பர்னாந்து மற்றும் மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு கபீர் ஹஷீம், ஹர்ஷ த சில்வா, கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் ரஞ்சித் பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள்ளனர்.

அதேபோன்று, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானசேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு திஸ்ஸ அத்தநாயக்க, பிரமித்த பண்டார தென்னகோன், கே. காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு கபீர் ஹஷீம், கௌரவ திலும் அமுனுகம,கனக ஹேரத், அசோக அபேசிங்ஹ மற்றும் லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு இம்தியாஸ் பாகிர் மாகார், சாந்த பண்டார, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, எஸ்.எம். மரிக்கார் மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, சிவஞானம் சிறீதரன், உதயகாந்த குணதிலக்க, குலசிங்கம் திலீபன் மற்றும் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு தலதா அதுகோரல, எச்.எம்.எம். ஹரீஸ், சிசிர ஜயகொடி, ஜீ.ஜீ. பொன்னம்பலம் மற்றும் அனுப பஸ்குவல் ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ துமிந்த திசாநாயக்க, கபீர் ஹஷீம், நலீன் பண்டார ஜயமஹ மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு ஜோன் செனவிரத்ன, வடிவேல் சுரேஷ், கௌரவ டீ. பி. ஹேரத், வேலு குமார் மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...