குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை!

355

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நன்கொடையாளர்களிடம் உதவி கோரப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சந்துஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உணவில் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை போதுமான அளவு சேர்ப்பதில் தற்போது குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், முட்டைக்கு பதிலாக உலர் பழங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் விநியோகஸ்தர்கள் விநியோகத்தை குறைத்துள்ளதாலும், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் உதவிகள் குறைந்து வருவதாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் நன்கொடையாளர்களின் உதவி தேவைப்படுவதாகவும், அதனால் பங்களிக்க கூடியவர்கள் இருப்பின் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here