நாட்டில் பருப்பு விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர், விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும், கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படும் நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.