சகல மத வழிபாட்டு தளங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நீண்ட கால நிவாரண திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.