அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“மண்டேலாவின் சட்டத்திற்கு அமைவாக சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை” என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.