follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP1ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்ஷோ அபே கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏனைய கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்க ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக முன்னதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும்...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...