உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தினை மேலும் நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று (15) நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளது.
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்தினால் மாணவர்கள் நலனை கருத்திற்கொண்டு அதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்கு 249,841 பேர் விண்ணப்பித்துள்ளதுடன், 5ஆம் தரப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு 243,704 பேரும் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.