கடந்த செப்டெம்பர் மாதம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றி வந்த போது 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபர் பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 384,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.