மதுபானசாலைகள் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், சிறப்பு அங்காடிகளிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமையால், குறித்த பகுதிகளிலும் அதிகமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில், மதுபானசாலைகளை திறப்பதன் மூலம், மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை உரியவாறு நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.