அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டம்

717

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளே வழங்கப்படவுள்ளன. எனவே எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்களையும் வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை, மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் தொடர்ச்சியாக மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here