கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை செயல்படுத்துவதற்கான சட்ட ரீதியான விடயங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான விடயங்கள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு தகுதி உடைய அனைவரும் முழுமையான தடுப்பூசிகள் பெற்றுக்கொண்ட பின்னரே குறித்த தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.