தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மிலிந்த ராஜபக்ஷ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சில் வைத்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று குறித்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.