ஐபிஎல் தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சன்ரைசஸ் ஐதராபாத் அணி தெரிவித்துள்ளது.