follow the truth

follow the truth

July, 27, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா

அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா

Published on

அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று(22) 02 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த நிலுவைத் தொகையை கட்டம் கட்டமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, புற்றுநோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட உயிர் பாதுகாப்பிற்கு தேவையான 14 வகையான மருந்துப் பொருட்கள் சுகாதார அமைச்சிடம் கையிருப்பிலுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தவிர, 384 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் 151 வகையான மருந்துப் பொருட்கள் நாட்டில் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களில் 60 வகையான மருந்துப் பொருட்கள் அடுத்த வாரமளவில் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பொலிஸார் அனுமதியின்றி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ். ஜோசப், கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் இந்தப்...

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை

வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யானைகள்...