ருமேனியா தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய இலங்கை பிரஜைகள் இருவருக்கும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமாக நேர்முகத் தேர்வு நடத்திய நால்வர் பதுளை பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம்(20) கைது செய்யப்பட்டனர்.
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக, வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்காமல் முகப் புத்தகத்தில்(Facebook) விளம்பரம் செய்யப்பட்டே குறித்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
பதுளை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட இந்த நேர்முகத் தேர்வில் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.