follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமுதல் முறையாக சர்வதேச சந்தையில் 'புளி வாழை'

முதல் முறையாக சர்வதேச சந்தையில் ‘புளி வாழை’

Published on

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள முதலாவது புளிப்பு வாழைப்பழம் நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்படும் புளிப்பு வாழை முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வொக்ஸ்ஹால் வீதியிலுள்ள டெவலப்மென்ட் இன்டர்பிளான் சிலோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று (25) ராஜாங்கனையில் புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தொகுதியாக 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமை துபாய் சந்தைக்கு இலங்கை புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாரத்திற்கு 10,000 டொலர் வருமானத்தை நாட்டுக்கு வழங்கியுள்ளது” என விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

எமது நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையின் பெயரை சர்வதேசப் புகழுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என அமரவீர தெரிவித்தார். .

“நம் நாட்டில் எல்லாவற்றையும் விமர்சிப்பவர்கள் இருக்கும் இவ்வேளையில், சொந்த நாட்டு மண்ணில் விளைந்த புளிப்பு வாழையை இன்று சர்வதேச சந்தைக்கு அனுப்புவது எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

விவசாயிகளுக்கு நவீன விவசாய தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சந்தையை அறிமுகப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் நம் நாடு விவசாயத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியும், நமது விவசாய பொருட்கள் சர்வதேச சந்தையை வெல்ல முடியும்..”

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...