கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் அழைத்து சஜித்தை பிரதமராக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்ததை
முன்னாள் ஜனாதிபதி எங்களுடன் பகிர்ந்து கொண்டார்’ என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தினால் சஜித்தை மக்கள் வீதியில் இறங்கி அடிப்பார்கள் என டயானா கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.