follow the truth

follow the truth

July, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமைத்திரி - மஹிந்த பங்காளிகளது முழுச் செலவு மில்லியன்களில்..

மைத்திரி – மஹிந்த பங்காளிகளது முழுச் செலவு மில்லியன்களில்..

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

No description available.

அந்தத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 578 தனியார் ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயிரத்து 317 தனிப்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன், 2015 முதல் 2019 வரை 850 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதவியேற்ற இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்ப்பேன் என மீண்டும் வலியுறுத்தி ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக செலவில் தனியார் ஊழியர்களை பராமரிப்பதில் முன்னோடிகளை மிஞ்சியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றுக் கொள்கை மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே 2019ஆம் ஆண்டு உரிய தகவல்களை கோரியிருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி செயலகத்தின் தீர்மானத்திற்கு எதிரான மேன்முறையீட்டை பரிசீலித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், 2022 நவம்பர் 14 ஆம் திகதி இது தொடர்பான தகவல்களை வெளியிட அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...