follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇஷாலினி விவகாரம் : மொழி பெயர்ப்பாளரின்றி மரண விசாரணை சாட்சிப் பதிவு ஒத்திவைப்பு

இஷாலினி விவகாரம் : மொழி பெயர்ப்பாளரின்றி மரண விசாரணை சாட்சிப் பதிவு ஒத்திவைப்பு

Published on

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் இஷாலினியின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் அடுத்த வருடம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீ/ 52944/02/21 எனும் குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 06) மரண விசாரணை சாட்சிப் பதிவுக்காக விசாரணைக்கு வந்தது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இவ்வாறு அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது 4ஆம் இலக்க சாட்சியாளரின் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இவ்வாறு மொழி பெயர்ப்பாளரின் உதவியைப் பெற முடியாமல் போகும் 2 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அதன்படி குறித்த வழக்கின் மரண விசாரணை சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 2023 ஜனவரி 10 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...