இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.