உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தலைமையில் வலுசக்தி அலுவல்களுக்கான உபகுழுவொன்றை நியமிக்க நேற்று (17) தீர்மானிக்கப்பட்டது.
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் நேற்றையதினம்(17) பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட பின்னர் இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.
வலுசக்தித் துறை தொடர்பில் அனுபவம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவின் தலைமைத்துவத்தின் கீழான இந்த உபகுழுவின் ஊடாக இந்நாட்டின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைகளில் எரிசக்தி துறையில் எதிர்காலத்தில் நேர்மறையான நடவடிக்கைகளை
எடுப்பதற்குத் தேவையான பிரச்சினைகள் குறித்து விவாதித்து தேவையான பரிந்துரைகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவைர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.