2024ஆம் ஆண்டு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுக்கான அதிகமான முறைப்பாடுகள் கிரிக்கெட் தொடர்பாகவே பெறப்பட்டுள்ளதாக, விளையாட்டு குற்றச்செயல்கள் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதிகள், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் (doping) பயன்படுத்தல் போன்ற காரணங்களுக்காக 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
2024ஆம் ஆண்டில் மொத்தமாக 27 விளையாட்டு குற்றச்செயல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதில் கிரிக்கெட்டுடன், எல்லே, ஹாக்கி, ஜூடோ, மேசை பந்து, கபடி மற்றும் பட்மின்டன் போன்ற விளையாடுகளும் அடங்குகின்றன.
இவற்றில் பல புகார்கள், 2024 ஶ்ரீலங்கா பிரிமியர் லீக் மற்றும் லெஜெண்ட்ஸ் கப் போட்டிகளின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த விசாரணைப் பிரிவுக்கு மூன்று முறைப்பாடுகள் மட்டுமே கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.