கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிலர் கவனயீனமாக செயற்படுவதாகவும் சிலர் அதனை புறக்கணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி தொடர்பில் போலிப்பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
அவற்றை நம்பாது தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியம் தொடர்பில் வைத்தியர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றமை தொடர்பில் சட்ட வரைவொன்று தயாரிப்பதற்கான தேவை ஏற்படும் பட்சத்தில், அது குறித்து சுகாதார தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.