follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவணிகம்ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வழங்கும் Iconic Galaxy

ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வழங்கும் Iconic Galaxy

Published on

Iconic Galaxy சமீபத்தில் அக்டோபர் 2022 இல் தமது அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி திட்டத்தை நிறைவு செய்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சொகுசு அடுக்குமாடி வீடுகளை ஒப்படைக்கத் ஆரம்பித்துள்ளது. இந்தத் வீட்டுத் திட்டமானது இரண்டு முதல் ஐந்து படுக்கையறைகள் வரையிலான 269 குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.

இலக்கம் 110 பாராளுமன்ற வீதி, Iconic Developments இனால் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை கையளித்த பின்னர், அதன் அடுத்த திட்டத்திற்காக ராஜகிரிய பகுதியைத் தேர்ந்தெடுத்தது. New City center என பிரபலமாக அறியப்படும் இந்த வளாகம் ஒரு பசுமையான இடமாகவும், மேற்கில் கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப்பையும், தெற்கில் தியவன்னா ஏரியையும், வடக்கு மற்றும் கிழக்கில் சதுப்புநிலக் கால்வாய்களையும் கொண்டுள்ளது. இங்கிருந்து, இராஜகிரியவைச் சுற்றியுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் மற்றும் சிறந்த உணவகங்கள் இலகுவாக சென்றடையலாம்.

பெரிய ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளி முற்றங்களுடன், காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் சர்வதேச தரத்திற்கு கவர்ச்சிகரமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இணையற்ற காட்சிகள் மற்றும் சிறந்த விதத்தில் பூர்த்தி செய்யப்பட்ட, இந்த ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அழகான வீட்டை பரிசளிக்கும்.

No description available.

மிகவும் ஆடம்பரமான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் 7 மாடிகள் முழுவதும், இங்கு வசிப்பவர்களுக்கு பல சிறந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் பல வசதியான சேவைகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு விருந்தினர்களுக்கு தனித்தனியான தனிப்பட்ட சந்திப்பு பகுதிகள் மற்றும் ஒரு சூப்பர் மார்க்கெட், வணிக மையம் மற்றும் ஸ்பா உள்ளிட்ட வசதிகளையும் வழங்குகிறது. இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்குமான அம்சங்களின் முழுமையான எல்லையாக இருக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Rooftop ல் கட்டப்பட்ட தொங்கும் தோட்ட சமூக கட்டிடம் உங்களுக்கு ஓய்வான மற்றும் அமைதியான அனுபவத்தை அளிக்கிறது. வெளிப்புற திரையரங்குகள், Rooftop உணவகங்கள், குடியிருப்பாளர்கள் ஓய்வெடுப்பதற்கான அழகான நினைவுகளை சேகரிக்கவும் பல வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...