follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவணிகம்இந்த பண்டிகைக் காலத்தில் HNB இன் 'Season of Giving'

இந்த பண்டிகைக் காலத்தில் HNB இன் ‘Season of Giving’

Published on

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, பண்டிகைக் காலங்களில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மன உறுதியை மேம்படுத்துவதற்காக Caritas Sri Lanka உடன் இணைந்து அதன் முன்னணி டிஜிட்டல் கட்டணப் செயலியான (App) SOLO மூலம் ‘Season of Giving’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூகப் பிரிவான ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான Caritas Sri Lanka, நாடு முழுவதும் உள்ள 12 மறைமாவட்டங்களில் முக்கிய மனித மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பணிபுரியும் மிகப்பெரிய மற்றும் மிகவும் மரியாதைக்குரிய மனிதாபிமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முகமாக Caritas தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்விற்கு கொழும்பு துணை ஆயர் அதி வணக்கத்திற்குரிய மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, HNB இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி டில்ஷான் ரொட்றிகோ மற்றும் Caritas Sri Lanka வின் தேசிய தலைவர் வண. அருட்தந்தை லூக் நெல்சன் ஆண்டகை, HNBஇன் பிரதி பொது முகாமையாளர் டிஜிட்டல் வணிகம், சம்பிக்க வீரசிங்க உள்ளிட்ட HNB இன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்குபற்றினர்.

No description available.

HNB SOLO மூலம் வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களால் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், வங்கி கூடுதல் நன்கொடையை நேரடியாக Caritas Sri Lanka கணக்கிற்கு வரவு வைக்கும். மேலும், HNB SOLO App உள்ள Direct Pay தேர்வின் மூலம் நிறுவனத்திற்கு நேரடியாக நன்கொடைகளை வழங்க வங்கி வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

No description available.

கடந்த ஆண்டு, HNB இதேபோன்ற திட்டத்தை ஹெல்ப்ஏஜ் ஸ்ரீலங்காவுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது, அங்கு SOLO App மூலம் அதிகமான நிதி திறட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC...

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...