சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) இரண்டு புதிய ஆன்லைன் இணையதளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான பயண செயல்முறையை இலகுவாக்கும் நோக்கில் இவ்வாறு புதிய ஆன்லைன் இணையதளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலமாக சுற்றுலா பயணிகள் தங்கள் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் பயணக் காப்பீட்டை நேரடியாக ஒரு இணையதளத்தில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய இணையத்தளத்தினூடாக விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையான தனித்துவமான சுற்றுலா குறிப்பு எண்ணைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு புதிய ஆன்லைன் இணையதளங்கள் ;
1. பி.சி.ஆர். சோதனைகள்/ பயணக் காப்பீடுகளுக்கான கட்டணம்: visititsrilanka.gov.lk
2. விசாவிற்கு விண்ணப்பம்: eta.gov.lk