போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 166 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இதற்கமைய இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடி, அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி தரப்படுத்தலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது.