‘பஸ் மேன் தலைவனாக முடியாது’

1105

பேரூந்துகளை ஓட்டி தலைவனாக முடியாது, பஸ்களுக்கு தீ வைத்து தலைவனாக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பேரூந்துகளை ஓட்டுவது தலைவனாக இருக்க வேண்டிய தகுதியல்ல.. பேரூந்துகளை பரிசளித்து ஓட்டி மனநிறைவு பெறுகிறார். பேருந்தை ஓட்டியதால் தலைவனாக முடியாது. பேருந்தை எரித்ததால் தலைவனாக முடியாது.

அவை நாட்டின் அரசியல் கலாசாரத்துக்கு ஏற்ற விஷயங்கள். இந்த அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதற்கு இந்த பாரம்பரிய அமைப்பில் இருந்து அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here