“தங்களின் பணி 8 மணி நேரம் மட்டும் அல்ல”

1309

அரச உத்தியோகத்தர்களின் பணியானது வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய வருடத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வெற்றிகரமாக செயற்பட வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.கடந்த ஆண்டை விட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை ஒரு பொறிமுறையாகவே பார்க்கின்றோம்.அவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்படவில்லை. ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்கள். பகுதிகளுக்கு இடையே போட்டியோ, இழுபறியோ இருக்க முடியாது.அவர்கள் தங்கள் பொறுப்பை மட்டுப்படுத்த முடியாது.நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அமுல்படுத்த அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.

இதன் மையம் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் ஆகும். இப்படித்தான் முன்னோக்கி செல்கிறது. எனவே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தங்களின் பணி எட்டு மணி நேரம் மட்டும் அல்ல. தங்களின் பணி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அல்ல. கடினமாக உழைத்து இயல்பு நிலையை உருவாக்குவோம். அனைவரின் ஆதரவுடன் நாட்டை முன்னேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here