டயானா வழக்கில் இன்றைய உத்தரவு

1006

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தில் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும், அவற்றை விசாரிக்குமாறும் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உரிய தூதரக அறிக்கை கிடைத்த பின்னர் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பது இலகுவாக இருக்கும் எனவும் அதுவரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமானதல்ல எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் போது இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் அவசியமில்லை என தோன்றுவதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here