சேபாலின் கதை குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வாக்குமூலம்

410

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சேபால் அமரசிங்கவிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று (09) காலை வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டது.

அண்மையில் சேபால் அமரசிங்க என்ற நபர் பௌத்தர்களின் மணிமகுடமான ஸ்ரீ தலதாவை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்படி பொலிஸ் மா அதிபருக்கு பல தரப்பினரிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகளின் பின்னர் கடந்த 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அத்துடன், குருநாகல், பொத்துஹெற , அஹுகுடாவில் அமைந்துள்ள போலி தலதா மாளிகையின் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் விசாரணை அதிகாரிகள் அங்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here