எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதம் தொடர்பான அறிக்கை கையளிப்பு

318

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் இலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (10) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிபுணர் குழுவில் 40 பிரதிநிதிகள் உள்ள நிலையில், பேராசிரியர் அஜித் டி சில்வா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பிரிவின் பீடாதிபதி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன ஆகியோர் இணைத் தலைவர்களாக கடமையாற்றியுள்ளனர்.

இந்தக் குழு ஒன்றரை ஆண்டுகளாக கப்பல் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here