follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஉயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு ஏற்படுமா?

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு ஏற்படுமா?

Published on

எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பரீட்சை நடைபெறும் காலத்தில், பரீட்சைகள் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தற்போது தயாரித்து வருகிறோம் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படுவது நியாயமில்லை என நான் கருதுகின்றேன், எனவே பரீட்சை திணைக்களத்திடம் அட்டவணையை கோரி மின்வேட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு அமைப்பை தயார் செய்ய எதிர்பார்க்கிறோம் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...