முன்னாள் ஜனாதிபதிகள் மீது தடை விதித்தமை இத்தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும்

893

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக கனேடிய அரசாங்கம் நேற்று (10) அறிவித்துள்ளது.

1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் கனேடிய அரசாங்கம் இந்த தடைகளை விதித்து வந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here