பரீட்சை காலத்தில் மின்விநியோகிக்க 05 பில்லியன் தேவை

449

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டிய பணி என்றும், மின்வெட்டு இல்லாத மேலதிக14 நாட்களுக்கு 05 பில்லியன் தேவை என்றும் அதற்காக நாளொன்றுக்கு 357 மில்லியன் ரூபாவாக 14 நாட்களுக்கு மின்சாரத்தினை வழங்க வழி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here