கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு கொரோனா

320

கோல்டன் குளோப்ஸ்(Golden Globes) விருது விழாவிற்கு சென்ற திரையுலகப் பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக Collin Farrell, Brendan Gleeson, Jamie Lee Curtis, Michelle Pfeiffer உள்ளிட்ட பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) ஔிபரப்பாகிய கிரிட்டிக்ஸ் சொய்ஸ் அவோர்ட்ஸ் விருது விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொவிட்-19 பரிசோதனை ​மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே தாம் தொற்றுக்குள்ளாகியிருப்பதை பிரபலங்கள் பலர் அறிந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here