“முஸ்லிம் தனியார் சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்தப் போவதில்லை”

1289

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

“.. முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் செல்வாக்கு செலுத்த போவதில்லை, அது முஸ்லிம் சமூகத்தின் விஷயம்.

ஆனால் ஒன்று நான் சொல்லிக் கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் மீளவும் செய்ய வேண்டாம்.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கு எதிராக சில முஸ்லிம் பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வதை நான் கண்டுள்ளேன்.. அது அவ்வளவு நல்லதல்ல. அதனை அங்கீகரிக்க முடியாது.

அது உண்மையில் பிள்ளைகளை பராமரிக்கும் சட்டத்தை மீறுவதாகும்

வயது வந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேறு விடயம், ஆனால் பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வது இருக்கக் கூடாது.

பிள்ளைகள் இப்படி ஆர்ப்பாட்டம் செய்யுமிடத்து முஸ்லிம்கள் குறித்த ஒரு எதிரான புரிதலை ஏனைய சமூகத்திற்கு எத்திவைப்பது போன்றதாகும், அதனால் தான் நான் கூறுகிறேன். நாம் அடித்துக் கொண்டது போதும் இன நல்லுறவுடன் இணையும் காலம் இது..” எனத் தெரிவித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here