follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published on

சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, வர்த்தக அமைச்சராக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் தாங்கள் முன்வைத்துள்ள பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான மேலதிக ஆவணங்களை சமர்பிப்பதற்கு முடிந்தால் திகதியை வழங்குமாறு பிரதிவாதி சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை பெப்ரவரி 21-ம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய சதொச ஊழியர்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெராட் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...