உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலத்திற்கு பூட்டு

1155

தென்அமெரிக்க நாடான பெரு நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டது.

ஆண்டு தோறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மச்சு பிச்சுவை பார்வையிடுகின்றனர்.

பெருவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி மச்சு பிச்சு மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெருவின் முன்னாள் ஜனாதிபதிபெட்ரோ காஸ்டில்லோ ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கடந்த சில வாராங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here