சக்வித்தி ரணசிங்கவுக்கு நீதிமன்றத்தினால் உத்தரவு

298

சக்வித்தி ரணசிங்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகள் மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு வைப்பிலிட்ட 14 கோடி ரூபாவிற்கும் அதிகமான மீளச் செலுத்தும் திட்டத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகள் உரிய தொகையை திருப்பி செலுத்த சம்மதித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக 19 குற்றப்பத்திரிகைகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, அடுத்த வழக்கு விசாரணை மார்ச் 17ம் திகதி சம்பந்தப்பட்ட திட்டத்தை நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here